குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு – சிருஷ்டி டாங்கே!

மேகா படத்தில் இடம்பெற்ற புத்தம் புதுகாலை பாடல் மூலம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. அடுத்து டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில காலம் ஒதுங்கி இருந்தவர் பி.லெனின் கதை, திரைக்கதை வசனத்தில் யமுனா ஈவி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கட்டில் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சிருஷ்டிக்கு ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரம். படம் பற்றி அவர் கூறியதாவது ’பேரை வைத்து எதுவும் முடிவு பண்ணிவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். ஒரு குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால் தான் இந்த பெயர். குடும்பத்துல இருக்குற உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப் போராட்டங்கள்தான் இந்தப் படம். எமோஷனல் டிராமா. உலக சினிமா மாதிரி முயற்சி பண்றோம். நிறைய விருது விழாக்களுக்கு அனுப்புற ஐடியாவோடதான் இந்தப் படம் உருவாகுது. அதே நேரத்தில் கமர்சியல் விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்துல நான் ஹவுஸ் வைப். பத்து வருஷத்துல முதல் முறையா இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறேன் இவ்வாறு கூறினார்.