குண்டு திரைப்பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் கயல் ஆனந்தி

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கயல் ஆனந்தி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன்பு நடித்த படங்களைகாட்டிலும் ரெம்பவே வித்தியாசமாக இருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் ஜோவை இந்த படத்தில் பார்க்கவே முடியாது. இந்த படத்தில் நான் ரொம்ப தைரியமா பேசக்கூடிய பொண்ணா என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் வரும் காதல், ரொமான்ஸ், எல்லாவற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக எனக்கு அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை நான் நேசித்தேன். இந்த படத்திற்கு உடல் உழைப்பு ரொம்ப முக்கியமா இருந்தது. அதை எல்லாமே அவர் எதிர்கொண்டார். மிகக்கடுமையாக அவர் உழைத்திருக்கிறார். இந்த அளவிற்க 100 சதவீதம் உழைப்பை மற்ற நடிகர்களால் கொடுக்க முடியுமா? கொடுப்பார்களா என்று எனக்கு தெரியாது. அந்தளவிற்கு கடின உழைப்பு திணேஷிடம் இருந்தது. படம் பார்க்கும் போது அது எல்லோருக்கும் புரியும். படத்தின் இயக்குனர் அதியன் சாரை நான் தோழர் என்றுதான் அழைப்பேன். அவரிடம் எல்லாவற்றையும் பேசமுடிந்தது. எனக்குள் இருக்கும் சந்தேகங்களை சுதந்திரமாக அவரிடம் கேட்டு உரையாட முடிந்தது. படப்பிடிப்பு இடைவேலையிலோ அல்லது முடிந்த பின்போ அவர் கடந்து வந்த பாதை அவர்களுடைய வாழ்க்கைமுறை, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பது குறித்து நிறைய பேசுவார். சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுவார் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் நவீன் சார் எனக்கு நல்ல நண்பர். இந்த படத்திற்கு பிறகு எனக்கு ஒரு நல்ல குடும்ப நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தப்படக்குழு ரொம்ப சின்னது. மொத்தமே 20 பேர்தான் இருப்போம். கேமிரா, ஒளிபதிவு போன்றவற்றைப்பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். இந்த குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள்தான். அதியன், நவீன், மாரி செல்வராஜ் இவர்களோடு உரையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய சமூகம் சார்ந்த விஷயங்களை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன்.