குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவரும் படத்தில் ஆர்யா ஒப்பந்தம் !

மௌனகுரு படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு மகாமுனி படத்தை இயக்கியுள்ளார்,  சாந்தகுமார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது, சமீபகாலமாக நான்  நடித்த படங்கள் அதிகமாக ரிலீசாகவில்லை. அதற்கு நான் காரணம் இல்லை. சில விஷயங்கள் எப்போதுமே நம் கையில் இருப்பதில்லை. நான் கடவுள் படத்துக்கு பிறகு நான் விரும்பிய, என்னை நானே நிரூபிக்க அமைந்த படம்தான் மகாமுனி. இதில் நான் மகா, முனி என்ற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறேன். இயக்குனர் சாந்தகுமார் 8 வருடங்களாக உழைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளார். முதலில் அவர் என்னிடம் சொன்னது, மகா கேரக்டரை மட்டும்தான். அதில் நான் நடித்த பிறகுதான், முனி கேரக்டரையும் நானே நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதனால்தான் இரண்டு கேரக்டருக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை காட்ட முடிந்தது. இப்படத்தை தொடர்ந்து குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருக்கும் பா.ரஞ்சித் ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.