“குப்பத்து ராஜா” படம் மே மாதம் வெளியீடு….

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கிவரும் படம் “குப்பத்து ராஜா”.இந்த படத்தில் மும்பை மாடல் அழகி பாலக் லால்வானி மற்றும் பூனம் பஜ்வா ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பார்த்திபன் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படம் சென்னை சேரிப் பகுதிகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்கு இந்த பெயர் அமைந்துள்ளது. இந்த படத்தை 'S FOCUSS' என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தனது டுவிட்டரில் இந்த படம் மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.