Cine Bits
கும்கி 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சினிமாவில் அறிமுகமான படம் 'கும்பி'. இப்பட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் இரண்டாம் பாகம் உருவாக படக்குழு சில வேலைகளில் உள்ளனர். இந்த படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் எதுவும் சரியாக தெரியவில்லை. ஆனால் படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் பிரசன்னா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படக்குழு இந்த வெற்றிபட இரண்டாவது பாகத்தை பற்றி தகவல்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது .