குயின், தலைவி படங்களுக்கு தடைக்கோரி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வழக்கு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி தமிழ் சினிமாவில் தலைவி, ஐயன் லேடி ஆகிய பெயர்களில் படங்கள் உருவாகிவருகின்றன. இது தவிர கெளதம் மேனன், பிரசாத் முருகேசன் இருவரும் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் எடுத்துள்ளனர். தலைவி, குயின் இரண்டும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது இதற்கு தடை விதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அன்னான் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தலைவி படக்குழு மற்றும் கெளதம் மேனனுக்கு நோட்ஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கெளதம் இது ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் கிடையாது. மாறாக குயின் எண்ணும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். தீபா சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இந்த தொடரில் இடம் பெறவில்லை. 25 கோடி செலவில் தொடரை தயாரித்துள்ள நிலையில் தீபா விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கெளதம் மேனன் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் தனது வாழ்நாள் முழுவதும் தீபா ஜெயலலிதாவுடன் இருந்தேன் என சொல்வது துளியளவும் உண்மை இல்லை. 2002 ம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை அவர் இறந்த பின் தான் வந்துள்ளார். இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வாதிட்டார்.அணைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டபிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தனர்.