‛குயின்’ ரீ-மேக்கில் தமன்னா

கங்கனா ரணாவத் நடிப்பில், 2014-ம் ஆண்டு வெளியான படம் ‛குயின்'. ஹிந்தியில் சூப்பர் ஹிட்டானதோடு, தேசிய விருதும் பெற்றது.இப்படத்தின் தமிழ் ரீ-மேக் கை ரேவதி இயக்குவதாகவும், சுஹாசினி வசனம் எழுதுவதாக உள்ளனர்.இந்நிலையில் குயின், ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா வேடத்தில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக, ‛தர்மதுரை', ‛தேவி' போன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து தனது நடிப்பை வெளிபடுத்தியதால் இவரை தேர்வுசெய்துள்ளனர்.