குருக்களாகவும் திருட்டு கும்பலின் தலைவனாகவும் நடிக்கும் ஆர்.கே. சுரேஷ் !

தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே. சுரேஷ் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தவர், பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தற்பொழுது கைலாசகிரி என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்துவருகிறார்.ஸ்ரீமதி ராவூர் அல்லிகேஸ்வரி மற்றும் அப்போலோ ப்ரோடுச்டின் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்.கே. சுரேஷ் உடன் மது பாலா, சாகர், முரளி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கின்றனர். லிங்கத்தை காக்கும் குருக்களாகவும், அந்த லிங்கத்தையே கடத்த வரும் கடத்தல் கும்பல் தலைவனாகவும் இரு வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆக்ஷன் குடும்பம் காதல், பக்தி என அனைத்தும் படத்தில் இடம் பெற்றுள்ளது. நவம்பரில் இப்படம் வெளியாகவிருக்கிறது.