குருவுக்கு மரியாதை செய்யவிருக்கும் கமல், ரஜினி !

தமிழ் சினிமாவில், நடிகர் கமலும், ரஜினியும் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் 1970-1980 களில் கமல், ரஜினி இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. அபூர்வ ராகங்கள் தொடங்கி ஆடு,புலி,ஆட்டம்,அலாவுதீனும் அற்புத விளக்கும், 16 வயதினிலே போன்ற பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடித்தால் சம்பளம் போதுமானதாக கிடைக்காது என்பதைக் கருத்தில் கொண்டு இருவரும் தனித்தனியாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாகவும் திகழ்ந்தனர். தற்போது 40 ஆண்டுகள் கழித்து கமலும், ரஜினியும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கமல் தயாரிக்க  லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தில்லுமுல்லு படப்பாணியில், கமல் கவுரவ பாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. படத்திற்கான பூஜை, மார்ச் முதல் வாரம் துவங்குகிறது. இப்படத்தின் வாயிலாக மறைந்த பாலச்சந்தர் குடும்பத்தினருக்கு உதவ கமலும் ரஜினியும் திட்டமிட்டுள்ளார்கள். தற்போது ரஜினி நடித்து வரும், அண்ணாத்த படம் இறுதி கட்டத்தில் உள்ளது. முழு நேர அரசியலுக்கு வரும்போது ரஜினி கமல் நடித்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அரசியலில் ரஜினி கமல் கூட்டணியும் உருவாக வாய்ப்புள்ளது.