குற்றப்பரம்பரை வெபசீரிஸ் மோதிக்கொள்ளும் பாரதிராஜா, கொம்பன் முத்தையா !

'குற்றப்பரம்பரை’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் அறிவித்து இருந்தார். பாரதிராஜாவை அடுத்து இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்ததால், பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனால் இருவருமே இந்த படத்தை எடுக்காமல் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’குற்றப்பரம்பரை’ என்ற திரைப்படத்தை வெப்சீரிஸ் ஆக பாரதிராஜா இயக்கி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இந்த வெப்சீரிஸ் விரைவில் ஒளிபரப்ப இருப்பதாகவும், இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாலா இயக்கவிருந்த ’குற்றப்பரம்பரை’ திரைப்படமும் தற்போது வெப்சீரிஸ் உருவாக்கப்பட இருப்பதாகவும், ஆனால் இந்த வெப்சீரிஸ்ஸை பாலாவுக்கு பதில் இயக்குனர் ’கொம்பன்’ முத்தையா இயக்க இருப்பதாகவும் இந்த வெப்சீரிஸ்ஸில் முக்கிய கேரக்டரில் குற்றப்பத்திரிகை நாவலை எழுதிய வேல ராமமூர்த்தி அவர்களே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதலில் பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை எடுக்க இருப்பதாக மோதிக்கொண்ட நிலையில், தற்போது பாரதிராஜாவும் முத்தையாவும் குற்றப்பத்திரிக்கை வெப்சீரிஸ் இயக்குவதில் மோதிக்கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ’குற்றப்பரம்பரை’ என்றாலே மோதல்தான் என்று கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.