குலதெய்வ கோயிலில் தனது உறவுக்கார பெண்ணை மணந்த யோகி பாபு !

இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க வந்துடுச்சு என்று கிண்டல் செய்தவர்கள் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பெயர் சம்பாதிச்சாச்சு, காசு சம்பாதித்தாச்சு அடுத்து எப்பொழுது திருமணம் என்று அனைவரும் யோகி பாபுவை கேட்டுக் கொண்டிருந்தார்கள். திருமணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் யோகி பாபுவுக்கும், தனது உறவினர் பெண்ணான மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (பிப்.05.02.2020) குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் யோகி பாபு. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது யோகி பாபுவின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.