குழந்தைகளுக்காக பள்ளி ஆரம்பிக்கும் சமந்தா !

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.