குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பாளராக மாறியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் !

பிரபல நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும், சிறந்த இயக்குனராகவும்  வலம் வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆரோஹனம்’, ’நெருங்கி வா முத்தமிடாதே’, ’அம்மணி’, 'ஹவுஸ் ஓனர்’ என தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வரும் அவர், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். பிஸியாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், தற்பொழுது புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். அதாவது, குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பாளராக அவர் புதிய அவதாரம் எடுத்திருக்கிறாராம். இதைப்பற்றி அவரே அறிவித்துள்ளார்.