குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது.. கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை!

ரிதம், முத்தம், அற்புதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர் நடிகை நந்திதா ஜெனிபர். சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் குஷ்பு நடிக்கும் லட்சுமி ஸ்டார்ஸ் நாடகத்தில் நடித்தார். ஆனால் திடீரென அவர் நாடகத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த ரோலில் நடித்து வருகிறார். இதுபற்றி நந்திதா கூறியது – எனக்கு குஷ்பு மேடத்துக்கு அடுத்தப்படியான நாயகி வேடம் என்று தான் முதலில் கூறப்பட்டது. அதனால் தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். மூன்று மாதங்கள் படப்பிடிப்பு போன பிறகு, திடீரென நட்சத்திரா நடிக்க வந்தார். அப்போது தான் எனக்கு தெரிந்தது, எனக்கு கூறப்பட்ட ரோலில் அவர் நடிக்கிறார் என்பது. இதுகுறித்து இயக்குனர் மற்றும் கதாசிரியரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் மழுப்பலாகவே பதில் அளித்தனர். குஷ்பு மேடம் ஒரு சீனியர் நடிகை அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டனர். நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, துணை நடிகையாக்கிவிட்டனர். இதனால் மனமுடைந்து தான் அந்த நாடகத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். துணை நடிகையாக நடிப்பதென்றால், அதை நான் சினிமாவிலேயே செய்துவிட்டு போகிறேன். நான் ஏன் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடிக்க வேண்டும்.