கூகுளை தெறிக்கவிட்ட தானோஸ்

எண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சினிமா டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இவர்களை குஷிப்படுத்த கூகுள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ தேடுபவர்களுக்கு கூகுள் சுவாரஸ்யம் அளிக்கிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் தானோஸ் கதாபாத்திரம் நவரத்தின கற்களை கொண்டு உலகின் பாதி மக்கள் தொகையை ஒரே சொடக்கில் அழித்து விடுவார். அந்த வகையில் கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து பின் திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது. மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது. இந்நிலையில், எண்ட்கேம் திரைப்படம் வெளியானதையொட்டி கூகுளில் தானோஸ் சொடக்கு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் செய்வோருக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, திரைப்படத்திற்கும் ஒருவித விளம்பரமாக மாறியிருக்கிறது.