கெட்ட போலீசாக களமிறங்கும் வெங்கட் பிரபு !

வெங்கட் பிரபு அடுத்து பார்ட்டி என்ற படம் இயக்கி இருக்கிறார். இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஏற்கனவே உன்னை சரணடைந்தேன், நிறைஞ்ச மனசு, ஜி போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது வைபவ் நடிக்கும் லாக் அப் படத்தில் கெட்ட போலீசாக வேடமேற்கிறார் வெங்கட்பிரபு. இப்படத்தை நித்தின் சத்யா தயாரிக்கிறார். சார்லஸ் இயக்குகிறார். படம் பற்றி நித்தின் கூறும்போது,’இப்படத்துக்கு லாக்கப் டைட்டில் பொருத்தமாக அமைந்திருக்கிறது. லாக்கப்பை சுற்றிலும் நடக்கும் வகையிலான த்ரில்லர் துப்பற்றியும் கதை.  இரண்டு போலீஸுக்கும் இடையே நடக்கும் மோதல் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அரோல் கரோலி இசை. சாண்டி ஒளிப்பதிவு. இதில் வாணிபோஜன், கதாநாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரிராவ், பூர்ணா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்’ என்றார்.