கெளதம் கார்த்திக், டேனி நட்பு.

நடிகர் கெளதம் கார்த்திக் ஹர ஹர மகாதேவி ஹிட்டுக்குப்பிறகு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர், சந்திரமெளலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய்சேதுபதியுடம் இணைந்து நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் பிப்ரவரி 2 தேதி திரைக்கு வருகிறது. இதில் பெரும்பாலான காட்சிகளில் காமெடியனாக டேனி இவருடன் இணைத்து  நடித்திருக்கிறார்.  இயக்குனர் சொன்னதால்  பல காட்சிகளில் தான் அதிகம் பேசாமல் டேனியை பேசுவதற்கு விட்டுக்கொடுத்து நடித்துள்ளாராம் அவர். இது பற்றி அவர் கூறுகையில் டேனி ரங்கூன் படத்தில் எனது நண்பனாக நடித்தார். தற்போது  ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலும் நண்பனாக நடித்துள்ளார். இதனால் நாங்கள் இவருக்கும் நல்ல ஒற்றுமையும், நல்ல நட்பு சினிமாவிலும் நிஜவாழ்விலும் இருக்கிறோம். சீனிமாவை தவிர நாங்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்றார் அவர்.