கெளதம் மேனனுக்கு கார்த்திக் நரேன் கேள்வி – மீண்டும் கிளம்பியது நரகாசுரன் சர்ச்சை !

துருவங்கள் 16’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் படம் வெளியாகாமல் போனது. மற்றும் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' ஆகிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சியிலிருந்தார் கெளதம் மேனன். இது தொடர்பான தனது மகிழ்ச்சியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அப்போது 'துருவ நட்சத்திரம்' தொடர்பாக “என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கலைவடிவமான இந்தப் படம் இல்லாமல் இந்த சீஸன் முடிந்து விடாது. விக்ரமுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம் . அடுத்த 60 நாட்களில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து 'துருவ நட்சத்திரம்' வெளியீட்டுக்குத் தயாராகும்” என்று ட்வீட் செய்திருந்தார் கெளதம் மேனன். அந்தப் பதிவுக்கு கார்த்திக் நரேன் “இது எப்போது பகலின் வெளிச்சத்தைப் பார்க்கும் என்ற தெளிவான விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும் சார். ஆம், இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுடன் 'நரகாசூரன்' படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.