கெளதம் மேனன் தான் என்னுடைய சூப்பர் ஸ்டார் – துல்கர் சல்மான் !

துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கவுதம் மேனன், தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர். கவுதம் மேனன் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப்படம் கண்டிப்பாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.