கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதாநாயகன் வருண் !

தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்தவர் வருண். சமீபத்தில் வெளியான பப்பி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வேல்ஸ் நிறுவனத்திற்காக, புதிய படமொன்றை சத்தமின்றி இயக்கிவருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இப்படத்தின் கதை ரொம்ப காலத்துக்கு முன்னாடி நடிகர் விஜய் நடிக்க படத்திற்கு பூஜையெல்லாம் போடபட்டது. படப்பிடிப்புக்கு செல்லாமலே படம் கிடப்பில் போடப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ரெடியாகி இருந்தது. பின்னர் அந்த படத்தை கைவிட்டனர். ஆனால் தற்சமயம் அப்படத்தின் கதையை தூசி தட்டி எடுத்திருக்கிறார் என்றும் வருணை வைத்து இயக்கம் படத்தின் கதை யோகன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதை என்கின்றனர். படத்தின் தலைப்பு அதுவே இருக்குமா? இல்லை வேறு தலைப்பினை தேர்ந்தெடுப்பார்களா என்பது விரைவில் தெரியும். எதுவானாலும் துணை நடிகராக இருந்த வருணுக்கு அடித்தது யோகம். கெளதம் வாசு தேவ் மேனன் இயக்கம் மற்றும் விஜய்க்காக எழுதப்பட்ட கதை என அமைந்திருக்கிறது.