கேப்டன் மார்வல் போன்ற சூப்பர் உமன் வேடங்களில் நடிக்க ஆர்வம் – சமந்தா பேட்டி!
கேப்டன் மார்வல் போன்ற சூப்பர் உமன் வேடங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வாழ்க்கை கதையிலும் நடிக்க விரும்புகிறேன். முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏற்கனவே 2 நடிகைகள் மறுத்த கதாபாத்திரத்தில் முதலில் தயங்கி பிறகு துணிந்து நடிக்க சம்மதித்தேன். இந்த கதாபாத்திரம் குறித்து எனது கணவர் நாகசைதன்யாவிடம் கூறியபோது அதிர்ச்சியாக என்னை பார்த்தார், படம் திருப்தியாக வந்துள்ளது. டிரெய்லருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன, நானே டப்பிங்கும் பேசி இருக்கிறேன். விஜய் சேதுபதியின் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் திணிப்பாக இல்லாமல் யதார்த்தமாக பொருந்தி இருக்கிறது. திருநங்கைகள் மீது இருக்கும் சில எண்ணங்களை இந்த படம் உடைக்கும். டைரக்டராகும் எண்ணம் இல்லை, தயாரிப்பாளராகும் ஆசை இருக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.