கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை

கேப்டன் என்றாலே தமிழ் சினிமாவில் முதலில் நியாபகத்துக்கு வருபவர் விஜயகாந்த். யாருக்கும் எதற்காகவும் அஞ்சுபவர் இல்லை, அது சினிமா, அரசியல் எதுவாக இருந்தாலும் சரி.
தனக்கு தோன்றிய விஷயத்தை செய்வார், பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பார். அப்படிபட்ட ஒருவர் இப்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளார் என்பதைப்பற்றி அனைவரும் அறிந்ததே அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்றெல்லாம் வதந்திகள் வந்தநிலையில் வெளிநாட்டில் கேப்டன் தனது மனைவியுடன் ஆங்கில படமான அக்குவா மேன் என்ற திரைப்படம் பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.