Cine Bits
கோபி நயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா !

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். இந்த நிலையில், கோபி நயினார் அடுத்ததாக இயக்கும் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் விரைவில் துவங்கவிருக்கிறது. ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக உருவாகும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.