கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி !

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.