கே 13 சைக்கோ திரில்லர் படம் – அருள்நிதி !

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள கே 13 படம் நாளை வெளியாகிறது. இது குறித்து அருள்நிதி கூறியதாவது: கே பிளாக்கில், 13ம் நம்பர் வீட்டில் நடக்கும் திரில்லிங்கான சம்பவங்களை பற்றி சொல்லும் படம் இது. 13ம் நம்பர் என்றவுடன், இது பேய் படமா என்ற கேள்வி எழும். ஆனால், இது பேய் படம் கிடையாது. ஒரேநாளில் நடந்து முடியும் கதை. அதுவும் பரபரப்பான, விறுவிறுப்பான சைக்கோ திரில்லர் கதை என்பதால், ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. நான் உதவி இயக்குனர் கேரக்டரிலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் எழுத்தாளராகவும் நடித்துள்ளோம். யோகி பாபுவுக்கு வித்தியாசமான கேரக்டர். பரத் நீலகண்டன் ஒவ்வொரு காட்சியிலும் சஸ்பென்ஸ் வைத்திருப்பதால், இதற்கு மேல் கதையைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது இவ்வாறாக அருள்நிதி கூறினார்.