கைதிக்கு பிறகு கார்த்தியின் படங்களுக்கு வெளி மாநிலங்களில் கூடியது மவுசு !

கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா தோல்வி அடைந்தது. அதே போல மணிரத்னம் இயக்கத்தில் நடித்த காற்று வெளியீடை படமும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இந்த நிலையில், கார்த்தியின் தீரன் அதிகாரம் 1 மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றன. அதே சமயம், தேவ் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தீபாவளிக்கு வெளியான கைதி படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூல் வேட்டை செய்தது. பொதுவாக கார்த்தி படங்கள் தெலுங்கு மொழியில் அவ்வளவு வரவேற்பை பெற்றது இல்லை. ஆனால், கைதி படத்திற்கு பிறகு கார்த்தியின் படத்தை வாங்க போட்டி போடுகிறார்கள். கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியாக உள்ள “தம்பி” படம் அதனை தொடர்ந்து சுல்தான் என இரண்டு படங்களும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களையும் வாங்குவதில் தமிழ் மற்றும் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.