கைதி வெற்றி கொடுத்த உற்சாகம் – கைதி பார்ட் 2 அறிவிப்பு !

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக 'டில்லி' கதாபாத்திரத்தில் கார்த்தி மிரள செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்தி கைதி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் மீது அதீத அன்பு செலுத்தும், என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த தம்பி, தங்கைகளை எப்போதும் பெருமைப்படுத்துவேன். உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான் என்று பதிவிட்டுள்ளார்.