கைது செய்யப்படுவார் மீரா மிதுன் – பிக் பாஸ் வீட்டில் களேபரம் !

மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் வேறு சிக்கினார். இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற போதே அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது : “மீராமிதுன் மீது 3 காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம் அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் திடீரென விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றுவிட்டார். வழக்கு இருக்கும் ஒருவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அனுமதி கிடைத்தது என தெரியவில்லை. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தெரிந்துவிட்டது. இனி நாங்கள் போலீசில் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்வோம். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீசாரால் கைது செய்யப்படலாம். இவர் என்னை மட்டுமல்ல மொத்தம் 4 பேரை ஏமாற்றியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் 2-3 நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்துவிடும்.