கொம்பனுக்கு பிறகு முத்தையாவுடன் மீண்டும் சேரும் கார்த்தி !

சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடிக்கிறார். இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு முன் குட்டிப்புலி, கொடிவீரன் ஆகிய படங்களில் சசிகுமாரையும், மருது படத்தில் விஷாலையும், தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்கையும் இயக்கிய முத்தையா, கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் கார்த்தியை இயக்குகிறார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.