கொலைமிரட்டல் புகார்:‘பிக்பாஸ்’ – நடிகை மீரா மிதுன் கைதாவாரா?

நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் 2016-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ அழகி பட்டத்தை வயதை குறைத்து பெற்றதாக எழுந்த புகாரில், அந்த பட்டம் பறிக்கப்பட்டது. அவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி மாடல் பெண்களிடம் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவருக்கு ‘முக-நூல்’ மூலம் எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஜோமைக்கேலுடன் கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜோமைக்கேலுக்கு மீரா மிதுன் கொலைமிரட்டல் விடுத்து பேசியது போன்று செல்போன் உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதுதொடர்பாக ஜோமைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது ஆபாசமாக திட்டுதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்மன் அனுப்பி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.