கோகோ கோலா மற்றும் பெப்சி தடை விதித்த பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

தமிழகமெங்கும் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது  ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து வேலைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பு தெரிவித்த பீட்டா மட்டுமில்லாமல் நம்நாட்டில் வெளிநாட்டு குளிர்பானமான கோகோ கோலா – பெப்சியும் தடை செய்யவேண்டும் என்று இந்த போராட்டக்களத்தில் இளைஞர்களின் குரலாக ஒலித்தது. போராடுபவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து 'இனிமேல் எங்களது திரையரங்கில் கோகோ கோலா – பெப்சி க்கு தடை விதிக்கிறோம்' என்று அறிவித்துள்ளார் பிரபல அபிராமி மல்டிபிளக்ஸ் திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன். இதற்கு முதல் படியாக ராமநாதபுரத்தில் உள்ள D சினிமாஸ் உரிமையாளர் இனி எங்கள் திரையரங்கில் எந்த ஒரு கோலா பானங்களையும் விற்க மாட்டோம் என கூறியுள்ளார். மேலும், பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.