Cine Bits
கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும் என ஆஸ்கர் இசையமைப்பாளர் கூறுகிறார்!

ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது பாகுபலி படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். “பாகுபலிக்கு முன்பே பல இயக்குனர்கள் இப்படி பிரமாண்டமாக முயற்சி செய்துள்ளனர். கோச்சடையான் படம் பாகுபலியாக இருந்திருக்கும், ஆனால் சிஜி, அனிமேஷன் சரியாக இல்லாததால் சரியாக ஓடவில்லை.” “அதனால் பாகுபலி தான் பிரமாண்டமான முதல் படம் என சொல்ல முடியாது, அதற்கு முன் வந்த படங்கள் தோல்வியடைந்துவிட்டன. தற்போது பாகுபலி கொஞ்சம் லக்கி, அனைத்தும் சரியாக அமைந்ததால் பிரமாண்ட வெற்றியை சுவைக்க முடிந்தது” என ஏ.ஆர். ரகுமான் பேட்டியில் கருத்தை தெரிவித்துள்ளார்.