கோடீஸ்வரியாக போகும் ராதிகா சரத்குமார் !

ராதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் வெளியான நாடகம் மூலம் பலரது இல்லத்தில் ஒருவராக மாறினார். மேலும் படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா. தனியார் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவரது கணவரும், நடிகருமான சரத்குமார் விஜய் டீவியில் இதே 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சி பலராலும் பாராட்டை பெற்றது. அதுபோல் ராதிகாவின் நிகழ்ச்சி சக்ஸஸ் ஆகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.