கோலிசோடா இயக்குனர் படத்தில் ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலிசோடா', 'பத்து எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலிசோடா 2' படங்களுக்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு மழை பிடிக்காத மனிதர் என்று தலைப்பு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதிவ்யா கைவசம் இந்தப் படம் மட்டுமே இருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தொடர்ந்து ஜீவா, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வெளியானது.