கோலிவுட்டில் பாடகராக அறிமுகமாகியிருக்கும் இலங்கை தமிழர் !

அடுத்த சாட்டை படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இடம் பெற்றுள்ள கரிக்காடு தானே பேரழகு, அவன் வருவான் என நான் இருந்தேன் ஆகிய பாடல்களை பாடி திரையுலகில் அறிமுகமாகியுள்ள சத்யன் இளங்கோ தற்போது பல படங்களில் பாடி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் இலங்கையை பூர்விகமாக கொண்ட எங்கள் குடும்பம் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறது. அந்நாட்டின் முதல் தமிழ் திரைப்படமான இனியவளே காத்திருப்பேன் என்கிற படத்தில் குழந்தை நடச்சத்திரமாக நடித்தேன் பாடகராகவும், நடிகராகவும் எனது திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன் என கூறுகிறார் சத்யன் இளங்கோ. ஏற்கனவே அசுரன் படத்தில் டீஜே என்னும் (திருநாவுக்கரசு) இலங்கை தமிழர் கோலிவுட்டில் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.