கோவில் கோவிலாக காதலனுடன் வலம் வரும் நயன்தாரா !

நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வரிசையாக இந்து கோவில்களை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கும் சென்றனர். அதனையடுத்து கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள பகவதியம்மன் கோவிலுக்கும், தொடர்ந்து சுசீந்திரம் கோவிலுக்கும் சென்று வந்துள்ளார். டிசெம்பரில் முடிவாகியிருந்த திருமணம் தள்ளிப்போய்விட்டதால் அதற்கான பரிகாரம் செய்வதற்காக இப்படி கோவில் கோவிலாக வன்வந்து கொண்டிருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தான் சந்தித்த காதல்கள் தோல்வியில் முடிந்ததால் இந்த காதலனும் பிரிந்து போகாமல் இருக்க வேண்டுமென தவிப்பில் இருக்கிறாராம் நயன். மேலும் அவருக்கு அரசியல் அழைப்பிகளும் வந்தவண்ணம் உள்ளது. கூடிய விரைவில் தனக்கு ஒரு நிரந்தர பாதுகாப்புக்கு வழிவகை செய்து கொள்கிறார். இதனையடுத்து அடுத்து அவர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பும் துவங்குவதையொட்டி விரதமிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.