கௌதமி:கமல் மீது மீண்டும் புகார்….

நடிகை கௌதமி, கமல்ஹாசன் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்குரிய சம்பளத்தை தனக்கு தராமல் பாக்கி வைத்து இருப்பதாகவும் மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த சம்பளத்தை பல முறை கேட்டு பார்த்தும் தரவில்லை என்று குற்றம்சாட்டி  உள்ளார். இதற்கு கமல்ஹாசன் பட நிறுவனம் தரப்பில்  மறுப்பு தெரிவித்து, விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்களுக்கு அவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கும், விஸ்வரூபம் படத்துக்கான முழு சம்பளமும் அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும், தசாவதாரம் படத்தை கமல் தயாரிக்கவில்லை என்றும் பதில் அளித்துள்ளனர்.இதற்கு அவர் ” நான்  கமலுடன் இணைந்து செயல்படுவதாக செய்திகள் வருகிறது. ஆனால் நான் கமலுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில் மரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.யாரிடம் இருந்தும் எதுவும் தேவை இல்லை. ஆனால் நான் உழைத்த படங்களில் இருந்து வர வேண்டிய சம்பளத்தை எதிர்பார்ப்பது தவறு இல்லை என்றும் சம்பளத்தை கேட்டால் தவறாக பேசுகிறார்கள் இதனால் மனவேதனை அடைகிறேன். தற்போது எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். எனது மகளின்  எதிர்காலம் மட்டுமே என் மனதில் இருக்கிறது. தற்போது புதிய உத்வேகத்தோடு பணிகளை செய்துகொண்டு வருகிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்தும், நான் ஆதாரம் இல்லாமல் கருத்துக்களை சொல்வதும் இல்லை, ஆதாரம் இல்லாமல் பேசவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.