கௌதம் மேனனுக்கு இத்தனை கோடி கடன்

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் படங்களில் பல அழகான காதல் கதைகளை எடுத்து சொன்னவர். அவரின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் படம் வெளியாவது சந்தேகமாகவே உள்ளது. எல்லாம் பணப்பிரச்சனை தானாம். கௌதம் மேனன் படம் தயாரிப்பு, இயக்கம், யூடுயூப் என பலவற்றிலும் கால் பதித்து வருகிறார். கூட்டு முயற்சியாக ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் என்ற சானலை நடத்தி Web series செய்து வருகிறார். தற்போது அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை எடுத்து வருகிறார்.விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை எடுத்துள்ளார். துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா என இருபடத்திறாக கடன் கொடுத்த தொகை தற்போது வட்டியோடு சேர்த்து ரூ 150 கோடியை எட்டியுள்ளதாக ஃபைனான்சியர் ஒருவர் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் இப்படத்திற்காக கொடுக்க வேண்டிய சம்பளத்தில் ரூ 1 கோடியே 70 லட்சம் பாக்கி இருக்கிறதாம். கௌதம் மேனனுக்கு படத்தயாரிப்பால் தான் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.