சகோவிற்கு பிறகு மீண்டும் பிரமாண்ட படைப்பில் பிரபாஸ் !

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய நடிகராகிவிட்டார். கடையிசியாக அவர் நடித்த சகோ படம் ஹாலிவுட் படத்திற்கு நிகராக தயாரிக்க பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. தற்போது யுவி கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து கோபிகிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் ஜில் பாசத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்கத்தில் மற்றுமொரு பிரமாண்ட படத்தில் பிரபாஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 200 கோடி என்கின்றனர் படக்குழுவினர். ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.