“சக்கபோடுபோடு ராஜா ” படத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பாளராகிறார் 

நடிகர், பாடகர் , நடன இயக்குநர் என்று பல திறமைகளை கொண்டவர் நடிகர் சிம்பு. தற்போது சிம்பு ‛அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிம்பு ஒரு புது அவதாரம் எடுக்க இருக்கிறார். காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சந்தானம்.

இவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இயக்குநராகவும், நடிகராகவும் ஆன வி.டிவி கணேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருக்கும் ‛சக்கபோடுபோடு ராஜா படத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பாளராகிறார் . இந்த தகவலை சிம்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் தான் இசையமைக்கவிருக்கும் முதல் படம் என்று கூறியுள்ளார்.