சங்கத்தின் நலன்கருதி விஷால் பதவி விலக வேண்டும் – கருணாஸ் பேட்டி !

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் நேற்று பழனி வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் திறக்கப்படும் நேரத்தில், நாமக்கல்லை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கோர்ட்டு வரை சென்றது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈகோவை விட்டுவிட்டு வர வேண்டும். குறிப்பாக நடிகர் விஷாலும், ஐசரி கணேசும் சொந்த பிரச்சினைகளை தவிர்த்து சங்கத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும் அல்லது சங்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.