சசிகலாவிடம் கோரிக்கை விடுத்த சரத்குமார்

அதிமுகவின் மூத்த தலைவர்கள் சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்று வழி நடத்தி செல்லவேண்டும் என்று வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் போயஸ் கார்டன் சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து சசிகலாவிடம் பேசிவிட்டு வந்தார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் ஜெயலலிதாவுடன் 33 வருடங்கள் அன்பு சகோதரியாய் வாழ்ந்து வந்த சின்னம்மா சசிகலாவே அதிமுகவின் தலைமை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்