சசிகலா வாழ்க்கை வரலாறு படமாகிறது !

தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஆந்திராவில் என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து, தயாரித்த படங்களான படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். பாலகிருஷ்ணா தயாரித்த படத்தில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நல்லவிதமாக காட்டி இருப்பதாகவும், ஆனால் தான் உண்மைத் தகவல்களை வைத்து இயக்கி வருவதாகவும் ராம்கோபால் வர்மா தரப்பில் தகவல் வெளியானது. இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை உருவானது. ஆந்திராவில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க ராம்கோபால் வர்மா சசிகலா வாழ்க்கை வரலாற்றையும் கையில் எடுத்துள்ளார். ‘அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.