சசிகுமாருடன் இணைந்த அஞ்சலி!

நடிகை அஞ்சலியை பொறுத்தவரை இந்த ஆண்டில் அதிக படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். கடந்த 2009 -ம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான நாடோடிகள் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதில் மீண்டும் சசிகுமார் நடிக்க அவருக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார் அஞ்சலி. இவர்களுடன் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார் சமுத்திரக்கனி. எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரன் இசை. விரைவில் பாடல், படம் ரீலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.