சசிகுமார், சரத்குமார் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கிவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. “நாநா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பாரதிராஜா நடிக்கின்றனர்.