சசி டைரக்‌ஷனில் சித்தார்த்-ஜீவி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ !

‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை உணர்வுகளை மையப்படுத்தி, தனது படங்களில் ஜனரஞ்சகமான முறையில் கதை சொல்பவர், டைரக்டர் சசி. அடுத்து இவர் கதை,
திரைக்கதை, வசனம், டைரக்‌ஷனில் ஒரு புதிய படம் உருவாகிறது. படத்துக்கு அவர், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். முதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார். ரமேஷ் பி.பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’