‘சச்சின் ஆந்த்தம்’ பாடல் ரிலீஸ் தேதி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் இசையுலக ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முதலில் இணைந்துள்ள “சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ்” திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப​ அதிர்ச்சி அளிக்கும் வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சச்சின் ஆந்த்தம்' (ஷச்ஹிந் ஆந்த்ஹெம்) என்ற பாடலை இன்று சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து வெளியிடவுள்ளனர். இப்படம் தெண்டுல்கரின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.