Cine Bits
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிக்கை – நடிகை கஸ்தூரி!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகை கஸ்தூரி முடிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார், இதுபற்றி அவர் நம்மிடையே கூறியதாவது எனது அரசியல் தொடர்பு குறித்து பலரும் கேட்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்காக பல கட்சிகள் என்னை அழைத்தன. விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டேன். சமூக சேவையில் ஆர்வம் உள்ள பலர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. சிலர் சுயேச்சையாக களத்தில் நின்றாலும் மக்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. அரசியல் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன். கண்டிப்பாக சுயேச்சையாக நிற்கமாட்டேன் இவ்வாறு கஸ்தூரி கூறினார்.