சண்டை காட்சியில் விபத்து: விஷ்ணு கை எலும்பு முறிவு

நடிகர் விஷ்ணு விஷால் சில தினங்களுக்கு முன் புதிய படத்துக்கு சண்டைக்காட்சியில் நடித்தபோது தவறி விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறும் போது,’சண்டையில் ஈடுபட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் எனது கழுத்து, முதுகெலும்பு, தோள்பட்டை எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். கடும் வலியால் துடித்தாலும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக என்னால் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. இதையே தொழிலாக செய்யும் ஸ்டன்ட் நடிகர்களுக்காக இதயம் நிறைந்த எனது பிரார்த்தனைகள் செய்கிறேன்’ என்றார் விஷ்ணு விஷால்.