சண்டை பயிற்சியில் அதி தீவிரம் காட்டும் ஆண்ட்ரியா !

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தளபதி 64' என  பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரதான வேடங் களில்  சாந்தனு, விஜய் சேதுபதி நடிக்க  மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஆண்ட்ரியாவுக்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் தரப்பட்டுள்ளது. அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். டெல்லியில் விஜய்64 படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விரைவில் சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.